இந்திய ரயில்வேயில் 9,000 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான கடைசி நாள் நெருங்கி விட்டதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை வரும் மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை அனுப்பலாம். கூடுதல் விவரங்களைப் பெற https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள காலிப் பணிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளன. சுமார் 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பவுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர டெக்னிக்கல் கிரேட்1 (சிக்னல்), டெக்னிக்கல் கிரேட் 111-ல் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இதற்கான ஊதியம் டெக்னிக்கல் கிரேட்1-க்கு (சிக்னல்) ரூ.29,200 , டெக்னிக்கல் கிரேட் 111-க்கு 19,900 என்று கூறப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள்: விண்ணப்பங்களை வரும் மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை அனுப்பலாம்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களைப் பெற https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்


Click it and Unblock the Notifications












