ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு திரும்ப வரும் விண்ணப்பக் கட்டணம்

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் வங்கி கணக்கு விபரங்களை திருத்தம் செய்வதற்கான காலம் ஏப்ரல் 10ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் வங்கி கணக்கு விபரங்களை திருத்தம் செய்வதற்கான காலம் ஏப்ரல் 10ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு திரும்ப வரும் விண்ணப்பக் கட்டணம்

இந்திய ரயில்வேப் துறையில் காலியாக உள்ள குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. இதில், மொத்தம் 62 ஆயிரம் பணியிடங்களுக்கு, 1.17 கோடி பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு பகுதி அளவிலான கட்டணம் திருப்பி செலுத்தப்படும். இதர பிரிவினருக்கு மொத்தக் கட்டணமும் திருப்பி செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், தற்போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கிக்கணக்கு விபரங்களை சரியாக சமர்ப்பிக்காத காரணத்தினால் விண்ணப்பக் கட்டணத்தை திருப்பி செலுத்தும் பணி முழுமை பெறவில்லை.

இந்நிலையில், ஆர்ஆர்பி குரூப் டி தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், தங்களுடைய வங்கிக்கணக்கு விபரங்களை திருத்தம் செய்து கொள்ளும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் அவர்களுடைய வங்கிக்கணக்கு விபரங்களை திருத்தம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் http://www.rrbcdg.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களுடைய வங்கி விபரங்களை திருத்தம் செய்ய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் http://rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் வங்கிக்கணக்கு விபரங்களை திருத்தம் செய்து கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRB Group D Fee Refund: Last date to update bank details extended
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X