இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வானது வரும் அக்டோபர் 16ம் தேதி வரை நடைபெறும் எனவும் அதற்கான தேர்வாளர்கள் அனுமதிச் சீட்டு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இன்று (செப்டம்பர் 17) வெளியிடப்பட்டுள்ளது என ரயில்வே துறையின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, அக்டோபர் 16ம் தேதியன்று வரை நடைபெறும் தேர்வுகளுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் இடம், நாள், மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 'indianrailways.gov.in' என்னும் இணையதள முகவரியில் காணலாம். மேலும், (RRB CEN 02/2018 admit card) பக்கத்தை கிளிக் செய்து தங்களுக்கான அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:-
வழி 1:-
ஆர்ஆர்பி இணையத்தில் 'http://indianrailways.gov.in' பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வழி 2:-
அதனுள் தங்களுடைய முகவரி (ஐடி) மற்றும் பிறந்த தேதி பதிவு செய்து உள் நுழைய வேண்டும்.
வழி 3:-
அப்பக்கத்தில் தேர்வாளருடைய அனுமதிச் சீட்டு வரும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு நாளன்று தங்களுடைய ஆர்ஆர்பி குரூப் டி அனுமதிச் சீட்டினை எடுத்துவருவது கட்டாயம். மேலும், விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தங்களுடைய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, பாஸ்போர் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
ஆர்ஆர்பி குரூப் டி 2018-க்கு வெற்றிகரமாக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்படும். இந்த அனுமதிச் சீட்டு முதற்கட்ட தேர்வுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்தகட்ட தேர்விற்கு தேர்வானவர்களுக்கு மீண்டும் புதிய அனுமதிச் சீட்டு வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications












