ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் குரூப் டி தேர்வுக்கான தேர்வாளர்களுக்கு முதற்கட்ட தேர்வு அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது என ரயில்வே துறை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (RRB) ரயில்வே குரூப் டி தேர்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக் கணக்கானோர் விண்ணப்பித்துள்ள இத்தேர்வு செப்டம்பர் 17ம் தேதி முதல் வரும் டிசம்பர் 27ம் தேதி வரை 49 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்ட தேர்வான கணினித் தேர்வு வரும் செப்டம்பர் 27ம் தேதியன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு!

இதனிடையே ஆர்ஆர்பி தேர்வு தேதி குறித்தான தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது தேர்விற்காக தயாராகி வருவோரை மிகவும் குழப்பமடையச் செய்யும். எனவே, ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் தகவல்களை அவ்வப்போது விண்ணப்பதாரர்கள் கண்காணித்துக் கொள்ள வேண்டும் என இந்தியன் ரயில்வே துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ஆர்பி குரூப் டி தேர்வு அனுமதிச் சீட்டை எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் ?

வழிமுறைகள் :-

வழி 1 : ஆர்ஆர்பி அதிகாரப்பூர்வ இணையத்திற்கு https://dc4-g22.digialm.com//EForms/configuredHtml/2022/57738/login.html செல்ல வேண்டும்.

வழி 2 : விண்ணப்பதாரரின் பதிவென் இட வேண்டும்.

வழி 3 : captcha code-யினை பதிவிட வேண்டும்.

வழி 4 : இறுதியாக லாங்கின் செய்ய வேண்டும்.

வழி 5 : விண்ணப்பதாரரின் அனுமதிச் சீட்டு அங்கே வெளியிடப்படும்.

வழி 6 : அதனை பதிவிறக்கம் செய்து நகல் எடுக்க வேண்டும்.

அனுமதிச்சீட்டு வெளியிடப்பட்டுள்ள மாவட்டங்கள் :-

  • ஆர்ஆர்பி அகமதாபாத்
  • ஆர்ஆர்பி அஜ்மர்
  • ஆர்ஆர்பி அலகாபாத்
  • ஆர்ஆர்பி பெங்களூர்
  • ஆர்ஆர்பி போபால்
  • ஆர்ஆர்பி புபனேஷ்வர்
  • ஆர்ஆர்பி பிலாஸ்பூர்
  • ஆர்ஆர்பி சன்டிஹார்
  • ஆர்ஆர்பி சென்னை
  • ஆர்ஆர்பி கோரக்பூர்
  • ஆர்ஆர்பி ஜம்மு
  • ஆர்ஆர்பி கொல்கத்தா
  • ஆர்ஆர்பி மால்டா
  • ஆர்ஆர்பி மும்பை
  • ஆர்ஆர்பி முசாபர்பூர்
  • ஆர்ஆர்பி பாட்னா
  • ஆர்ஆர்பி ராஞ்சி
  • ஆர்ஆர்பி செகந்தராபாத்
  • ஆர்ஆர்பி சிலிகுரி
  • ஆர்ஆர்பி திருவனந்தபுரம்

ஆர்ஆர்பி குரூப் டி மற்றும் ஏஎல்பி தேர்வு விபரங்கள்:-

விண்ணப்பதாரர்கள் : 1.9 கோடி
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் : 2.4 கோடி
காலிப் பணியிடங்கள் குரூப் டி : 63000

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRB Group D Admit Card 2018 Download Link Active
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X