மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ரூர்கேலா இரும்பு ஆலையில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். இது செயில் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆலையாகும்
செய்ல் (SAIL) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். ரூ. 48,681 கோடி ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
மத்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் செயில் உள்ளது. பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ, பர்ன்பூர் ஆகிய 5 நகரங்களில் செயில் உருக்காலை பிரமாண்டமாக அமைந்துள்ளது.
மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது.

ரூர்கேலா இரும்பு உருக்காலை (RSP), ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் அமைந்துள்ளது.இது 1959-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மேற்கு ஜெர்மன் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் பழங்குடியின மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 19,000 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டது.
2010-12 விரிவாக்கத்திற்கு பிறகு, RSP தற்போது 4.5 MTPA (ஆண்டுக்கு மில்லியன் டன்) ஹாட் மெட்டல், 4.2 MTPA கச்சா ஸ்டீல் மற்றும் 3.9 MTPA விற்பனையான ஸ்டீல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. 19,134 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இத்தகைய பெருமை வாய்ந்த ரூர்கேலா இரும்பு தொழிற்சாலையில் தற்போது ஆப்பரேட்டர் டெக்னீசியன் பிரிவில் பாய்லர் ஆப்பரேட்டர் 20, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 10, அட்டென்டன்ட் டெக்னீசியன் பிரிவில் எலக்ட்ரீசியன் 25, பிட்டர் 28, எலக்ட்ரானிக்ஸ் 10, மெஷினிஸ்ட் 10, டீசல் மெக்கானிக் 4, ஐ.டி., 3 என மொத்தம் 110 பணி இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளன.
ஆப்பரேட்டர் டெக்னீசியன் பணிக்கு டிப்ளமோ படிப்பு மற்றும் அட்டென்டன்ட் டெக்னீசியன் பணிகளுக்கு ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.
மேலும், 16.12.2023-ம் தேதியின் அடிப்படையில் பாய்லர் ஆப்பரேட்டர் பணிக்கு 18 முதல் 30 வயதும், மற்ற பதவிக்கு 18 முதல் 28 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு முறையில் தகுதி வாய்ந்த நபர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக ஆப்பரேட்டர் பணியிடங்களுக்கு ரூ. 500 செலுத்த வேண்டும். இதில் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 150 செலுத்தினால் போதுமானது. அட்டென்டன்ட் பணியிடங்களுக்கு ரூ. 300 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி. பிரிவினர் ரூ. 100 செலுத்தினாலே போதுமானது. விண்ணப்பங்களை அனுப்ப வரும் டிசம்பர் 16-ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு sailcareers.com என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு அறியலாம். டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications












