மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : ரெப்கோ வங்கி
பணி : இளநிலை உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 40
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.11,765 முதல் ரூ. 31,540 வரையில்
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் இதர பிரிவினருக்கு ரூ.700.
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை : வங்கி கார்டு மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.repcobank.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் : சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் மற்றும் திருநெல்வேலி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.06.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.repcobank.com/uploads/career/6.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












