டிஆர்டிஓவில் சைண்டிஸ்ட் பணிக்கு ஆள் வேணுமாமா அப்ளை பண்ணுங்க!

Posted By:

தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் டிஆர்டிஓவில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணபிக்கலாம். டிஆர்டிஓவில் சைண்டிஸ்ட் பணியிடத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டிஆர்டிஓவில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியீடு

டிஆர்டிஓ சைண்டிஸ்ட் பி பணியிடம் மொத்தம் 76 எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஆர்டிஓ வில் அறிவிக்கப்பட்டுள்ள சைண்டிஸ்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியானது பத்தாம் வகுப்பு அத்துடன் மாஸ்டர் டிகிரி முடித்திருக்க வேண்டும். டிசம்பர் 26 ஆம் நாள் 2017ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கப்பட்டோரில் நேரடித் தேர்வு மூலமாக தேவையானோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பங்களை செலுத்தலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் நேரடியாக அறிவிக்கையை முழுவதுமாக தெளிவாக படித்திருக்க வேண்டும்.

சார்ந்த பதிவுகள் :

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிக்கையை முழுவதுமாக படித்தப்பின்பு இணைய இணைப்பினை திறந்து விண்ணப்பிக்க பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் பெயர் கல்வித்தகுதியை பூர்த்தி செய்து அவற்றை பரிசோதித்து தேவைப்படும் தகவல்களை வழங்க வேண்டும். கொடுக்கப்பட்ட தகவல்களை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும். அத்துடன் உறுதி செய்தபின்பு விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். விண்ணப்பித்த பின்பு விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளலாம்.

டிசம்பர் 5 , 2017 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது . டிசம்பர் 26, 2017 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை உடன் இணைத்துள்ளோம். விண்ணப்ப அறிவிக்கையை உடன் இணைத்துள்ளோம். டிஆர்டிஓவின் விண்ணப்ப இணைப்பையும் உடன் இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள் :

இஸ்ரோவில் அப்பிரண்டிஸ் சயிண்டிஸ்ட் பணிக்கான வேலை வாய்ப்பு அற்விப்பு

English summary
here article tell about job notification of DRDO

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia