ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது !

Posted By:

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் காரைகுடி கிளையில் வேலைவாய்ப்புக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி நவம்பர் 22

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் கிளை இயங்குகின்றது. தமிழத்தின் கிளைகளுள் ஒன்றான ஆவின் நிறுவனங்களில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 24 பணியிடங்கள் ஆகும்.

காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் வெர்டினரி மேனேஜர் பணிக்கு 3 பேரூம், டெய்ரி மேனேஜர் பணிக்கு ஒருவரும் அத்துடன் கிரேடு3 பிரிவு பிரைவேட் செக்கிரட்டிக்கு 1, கிரேடு 2பிரிவில் எக்ஸ்டென்ஷன் ஆஃபிசர் 2 பணியிடங்களும், சீனியர் அஸிஸ்டெண்ட் பணிக்கு 17 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெர்டினரி மேனேஜர் பணிக்கு விண்ணப்பிப்போர் அந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். டெய்ரி மேனேஜர் பதவிக்கு பட்டப்படிப்பு அவ்வாறே டெய்ரி பிரிவில் பட்டப்படிப்பும் அத்துடன் முதுகலை பட்டபடிப்பு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிரைவேட் செக்கரட்டரி பணிக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் டைபிங் தெரிந்திருக்க வேண்டும். சீனியர் பேக்டரி அஸிஸ்டெண்ட் பணிக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். இவ்வாறு காலிப்பணியிடங்களின் பணிகளுக்கு ஏற்ப அந்தந்த பிரிவுகளில் கல்வித்தகுதி மாறுபடும்.

ஆவின் நிறுவனத்தில் எழுத்து மற்றும் நேரடி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆவின் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பதை முறையாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை உடன் இணைத்து தரவேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
ஜெனரல் மேனேஜர்,
சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பால்உற்பத்தி யூனிட்,
ஓ சிறுவயல் ரோடு ,
கலனி வாசல்,
காரைகுடி,
630 002

மேலும் விரிவான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை அறிவிக்கவும். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கவும். ஆவின் நிறுவனத்தில் விண்ணப்பிக்க இறுதிதேதி நவம்பர் 22 ஆகும். 

சார்ந்த பதிவுகள்:

சிப்பிங் கார்பரேஷன் இந்தியாவில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் ! 

மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ! 

தேசிய திட்ட அமலாக்கத்துறையில் ஆயிரக்கணக்கான காலியிடம் விண்ணப்பிக்கவும் !!

English summary
here article tell about job notification of Avavin

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia