OMC Staff Nurse Recruitment 2022: இங்கிலாந்தில் செவிலியர் பணிக்கு ரூ.2.50 லட்சம் ஊதியம்...!

இங்கிலாந்தில் செவிலியர் பணி

இந்தியா உள்பட உலக நாடுகள் பெருந்தொற்றால் முடங்கியது. கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளான நபர்களால், மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.

அந்த நேரத்தில் தான் மருத்துவர், செவிலியரின் பங்கை, இந்த உலகம் அறிந்தது. குறிப்பாக, செவிலியரின் பங்கை, உலகமே போற்றியது.

இங்கிலாந்தில் செவிலியர் பணி:

அந்தளவுக்கு செவிலியர் பணி அளப்பறியது, பெருந்தொற்று காலத்தில். அத்தகைய புனிதமான பணி சார்ந்து படித்தவர்கள், இங்கிலாந்து நாட்டில் பணிபுரிய ஆண், பெண் செவிலியர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் : அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனம்(OVERSEAS MANPOWER CORPORATION LTD)

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்

செவிலியர்(Nurse)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கல்வி தகுதி

'இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு, Diploma (Nursing) அல்லது B.Sc (Nursing) degree பயின்ற குறைந்தபட்ச ஒரு வருட அனுபவமும், OET/IELTS தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் பலர் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்/ பணி விவரம்

இப்பணிக்கு மாத சம்பளம் ரூ.2,00,000/- முதல் 2,50,000/- வரை வழங்கப்படும். தகுதியுள்ளவர்களின் விவரத்தை, வெளிநாட்டு வேலை வழங்குவோருக்குத் தெரிவிக்கும் பொருட்டு, OET (Oocupational English Test) பயிற்சியில் Grade B மற்றும் அதற்குமேல் தேர்ச்சிப் பெற்றவர்களும், IELTS (International English Language Testing. Systern) பயிற்சியில், Band 7.0 மற்றும் அதற்கு மேல் தேர்ச்சிப் பெற்றவர்களும், omcmanpower.com/registration.php

என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவு செய்யும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

வெளிநாட்டில் பணிப்புரியும் பொருட்டு, OET இலவசப் பயிற்சி பயில விரும்பும் செவிலிய மாணவர்கள்/மாணவிகள் மற்றும் வேலை அனுபவமுள்ள செவிலியர்களுக்கு அரசின் மூலமாக முன்வரிசையின் அடிப்படையில் , இலவசப் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கொடுக்கப்பட்டுள்ள வலைதள இணைப்பில் தவறாமல் பதிவு செய்து பயனடை கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புரோக்கர் / ஏஜெண்ட் ப்ரீ

இந்த நிறுவனத்தில் பதிவு செய்வது நான்கு வருடங்களுக்கு செல்லத்தக்கதாகும். எனவே, இந்நிறுவனத்தில் செல்லத்தக்க பதிவில் உள்ள பதிவுதாரர்கள் மட்டும், தற்போது IELTS அல்லது OET-ல் தேச்சிப்பெற்றிருப்பின் தங்களுடைய பதிவு எண், பதிவிட்ட தேதி, சுய விண்ணப்பப்படிவம் மற்றும் ELTS/OET தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களையும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

சந்தேகங்களுக்கு நேரா பேசுங்க...

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் ஆகும். ஆகையால் நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ எவரும் இல்லை; விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே தடையின்றி, இந்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் சி.ந.மகேஸ்வரன் அறிவித்துள்ளார்.

பதிவு பற்றிய விவரங்கள் உள்பட அனைத்து தகவல்களையும் பெற கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

அதிகாரப்பூர்வ இணையதளம்/ பதிவு முறை பற்றிய தகவலுக்கு...!

https://www.omcmanpower.com/index.php

https://www.omcmanpower.com/eventInfo.php?eid=107

https://www.omcmanpower.com/eventInfo.php?eid=108

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Both male and female nurses can apply to work in the UK; Do not forget that the Overseas Employment Company called 'Overseas Manpower Corporation Limited' is a Public Sector Undertaking under the Government of Tamil Nadu and does not have any middlemen or agents under the company. Work in England with a monthly salary of Rs.2.50 lakh, Both male and female nurses
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X