கலைவாணர் அரங்கத்தில் வேலைவாய்ப்பு விருப்பமுள்ளோர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted By:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் வேலை வாய்ப்பு காத்திருக்கின்றது மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்ற கலைவாணர் அரங்கத்தில் வேலை வாய்ப்புக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் . சென்னை மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் கலைவாணர் அரங்கத்தில் ஏசி ஆப்ரேட்டர், வயர் மேன், பிளம்பர், சவுண்டு ஆப்ரேட்டர்கள் பணி நிரப்பபடவுள்ளது . குறிப்பிட்ட பணிகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது அனைத்து பணிகளுக்கும் ஒரு வருட அனுபவம் தேவைப்படுகிறது .
குறிப்பிட்ட பணியில் அனுபவமும் விருப்பமுள்ள 28 வயதுக்குள் இருக்க வேண்டும் . எஸ்எஸ்எல்சி படித்திருக்க வேண்டும் . அரசு சான்றிதலுடன் தொழில்நுட்ப பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

சம்பளமானது 5200- 20200 படிஊதியம் 2200 மற்றும் 2600 வழங்கப்படுகிறது.
விருப்பமும் தகுதியுடையோர்கள் விண்ணப்பத்தில் பெயர்,பிறந்தநாள் , முகவரி, நிலையான முகவரி , செந்த மாவட்டம், கல்வி தகுதி , சாதி பிரிவு,கைபேசி எண் போன்ற இதர விவரங்கள் குறிப்பிட்டு ஜூலை 31 ஆம் நாள் மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் . தகுதியும் முன்னுரிமையும் உடையோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

விருப்பமும் தகுதியும் உடையோர்கள் விண்ணப்பிகலாம், பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதியாகும்

ஜூலை 31 ஆம் மாலை 5 மணிக்குள் குறிப்பிட்ட விவரங்களுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களும் இணைத்து கையெப்பமிட்டு அனுப்ப வேண்டும் . மாலை 5 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் . சரியான விவரங்கள் மற்றும் தகுதி சான்றிதழ்கள் சரியாக இணைக்கப்படவில்லையென்றாலும் நிராகரிக்கப்படும் . விண்ணப்பங்கள்பதிவு அஞ்சல் அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி
மக்கள் தொடர்பு அலுவலர்,
கலைவாணர் அரங்கம்,ஓமந்தூரார் அரசினர் தோட்டம் , வாலாஜா சாலை சென்னை 2 .

சார்ந்த படிப்புகள் : 

இந்திய கடற்படையில் அதிகாரி பணிவாய்ப்பு பிஇ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

English summary
here article tell about recruitment notification for Kalaivaanar arngam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia