மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் அதாவது ஏப்ரல் 9 முதல் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மறக்காதீங்க....! ஏப்., 11 கடைசி தேதி.

நுழைவு தேர்வு
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில், இளங்கலை, முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவு தேர்வு 2022-23 ஆம் கல்வியாண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கான அறிவிப்பை, யு.ஜி.சி., அண்மையில் வெளியிட்டது.
அதன்படி, இளநிலை படிப்புக்கான 'க்யூட்' தேர்வு மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி முதல் வாரம் தொடங்கப்பட்டது.
இதேபோல, முது நிலை படிப்புகளுக்கான 'க்யூட்' தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3 வது வாரத்தில் நடைபெற உள்ளது.
நோ பிளஸ் டூ மார்க்
இளநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூன் 3 ஆம் வாரமும், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை ஜூலையிலும் வெளியிட்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.
தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் மூன்று மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடக்கும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
அவகாசம் நீட்டிப்பு
இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்கு, பிப்ரவரி முதல் விண்ணப்பம் தொடங்கப்பட்டது. விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச்.12 ஆம் தேதி என, அறிவிக்கப்பட்டது. பின், மார்ச்.30ஆம் தேதி அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்களின் தொடர் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மீண்டும் விண்ணப்பிக்கலாம் என, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 9 முதல் 11ஆம் தேதி வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க, https://cuet.samarth.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
How to apply Cuet ug exam?
தெரிஞ்சுக்கோங்க...!
முதலில் https://cuet.samarth.ac.in/என்ற இணையத்தை கிளிக் செய்யவும்.
முகப்பு பக்கத்தில் தோன்றும் CUET UG 2023 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை நிரப்ப வேண்டும்.
பின்னர், விண்ணப்பத்தை நிரப்பியவுடன் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பொது/ஓபிசி பிரிவினருக்கான கட்டணம் ரூ.700 மற்றும் மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.650 என, அறிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications












