இனி இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கு அனுமதி இல்லை என்று இந்திய மறுவாழ்வு கவுன்சில் என்று அழைக்கப்படும் ரீஹேபிளியேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா (ஆர்சிஐ) (RCI- REHABILITATION COUNCIL OF INDIA) உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியப் பணியிடங்களில் சேர உதவும் பி.எட். படிப்பு இந்தியா முழுவதும் பிரபலமாக உள்ளது. தற்போது இந்த பி.எட். படிப்புக்கு 2 ஆண்டு படிப்பாக உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து நான்கு ஆண்டுக்கான பி.எட்(B.Ed.) படிப்பு அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் இனிமேல் 2 ஆண்டு பி.எட்.(B.Ed) படிப்பிற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எட். படிப்பு நிர்வாகத்தை கண்காணித்து வரும் ஆர்சிஐ அமைப்பு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பி.எட். (B.Ed) படிப்பு:
இந்தியாவில் மூன்றாண்டு பி.எஸ்சி, பி.ஏ. (B.Sc., BA) உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு தான் இரண்டாண்டு பி.எட். (B.Ed.) பட்டப்படிப்பை பயில முடியும். இதனால், மாணவர்களுக்கு படிப்பை முடிக்க அதிக நாட்கள் தேவைப்படுவதால் இளநிலை பட்டப் படிப்புகள் இல்லாமல் 12-ஆம் வகுப்பு முடித்த பிறகு நேரடியாகவே பி.எட்.(B.Ed.) படிக்கும்படியாக நான்கு ஆண்டு பி.எட்.படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த நான்கு ஆண்டிற்கான பி.எட் (B.Ed.) படிப்பு 2024-2025 ஆம் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இதனால், மாணவர்கள் அடுத்த ஆண்டில் இருந்து நேரடியாக 12-ஆம் வகுப்பு முடித்ததும் நான்கு ஆண்டு பி.எட் (B.Ed.) சேர்ந்து கொண்டு படிப்பைத் தொடரலாம்.
மேலும், அடுத்த ஆண்டில் இருந்து 2 ஆண்டு பி.எட். (B.Ed.) படிப்பிற்கான அனுமதியை கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டாம் என RCI அறிவித்துள்ளது.
இதுதொடர்பான உத்தரவை அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஆர்சிஐ அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications












