மத்திய அரசு நிறுவனத்தில் மகத்தான வேலை...!

மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய ரசாயன, உர நிறுவனத்தில்(ஆர்சிஎப்எல்) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதிவாய்ந்த இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து பலன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCF) என்பது மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது ரசாயனம் மற்றும் உரங்களை உற்பத்தி செய்கிறது. மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. RCF இந்தியாவில் உள்ள நான்காவது பெரிய, அரசுக்கு சொந்தமான உர உற்பத்தியாளர் நிறுவனமாக சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு நிறுவனத்தில் மகத்தான வேலை...!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனமானது, இந்திய உரக் கழகத்தின் மறுசீரமைப்பின் விளைவாக 1978-ம் ஆண்டு மத்திய அரசால் நிறுவப்பட்டது. ஆர்சிஎஃப் நிறுவனமானது யூரியா மற்றும் சிக்கலான உரங்களை (NPK) பரந்த அளவிலான தொழில்துறை ரசாயனங்களுடன் உற்பத்தி செய்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் டிராம்பே, தால் பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைத்து நாட்டுக்குத் தேவையான உரங்களை உற்பத்தி செய்து தருகிறது.

இந்த பெருமைமிகு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பிரிவில் மெட்டீரியல் செக்சனில் 23 காலியிடங்கள், சட்டப் பிரிவில் 2 காலியிடங்கள் என மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

மெட்டீரியல் பிரிவுக்கு பி.இ., / பி.டெக். படிப்பையும், சட்ட பிரிவுக்கு எம்.எல். படிப்பையும் படித்து முடித்திருக்க வேண்டும்.

மேலும், வயது 1.9.2023-ம் தேதியின் அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் தரப்பட்டு உள்ளது.

ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் இளைஞர்கள் இந்தப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவர்.

இதற்கான தேர்வு மையம் சென்னை நகரில் அமைக்கப்படும்.

காலியாக உள்ள இந்தப் பணியிடங்களுக்கு
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்புதல் நலம்.

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,000 செலுத்த வேண்டும். மகளிர், எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் (1.12.2023) அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு rcfltd.com என்ற இணையதள முகவரியைத் கொண்டு அறிய முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF Ltd) has invited applications for 25 Management Trainee posts. Interested candidates can apply online through the official website at www.rcfltd.com.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+