ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா? கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ) காலியாக உள்ள கிரேடு பி பகுதிக்கு உட்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்.பி.ஐ) காலியாக உள்ள கிரேடு பி பகுதிக்கு உட்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் பணியாற்ற ஆசையா? கிரேடு ‘பி’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்பணியிடங்களுக்கு தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

நாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் முதன்மையானது ஆர்.பி.ஐ என்னும் இந்திய ரிசர்வ் வங்கி. இவ்வங்கியில் 2019-20ம் ஆண்டிற்கான "பி" கிரேடு பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், பொதுப் பிரிவு, DEPR, DSIM என மொத்தம் மூன்று பிரிவுகளில் 199 பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி மற்றும் பணியிட விபரங்கள்

பணி மற்றும் பணியிட விபரங்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பிரிவுகளில் பொருளாதார கொள்கை மற்றும் ஆராய்ச்சிக்கான துறையில் 20 பணியிடங்களும், புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறையில் 23 பணியிடங்களும், பொதுப் பிரிவில் 156 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

கல்வித் தகுதி:

பொதுப் பிரிவிற்கு விண்ணப்பிக்க 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். DEPR மற்றும் DSIM ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க துறை சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். (மேலும் விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.)

வயது வரம்பு:

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 1 செப்டம்பர் 2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருத்தல் அவசியம். அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எம்.பில் படித்தவர்களுக்கு உச்சவயது 32 என்றும், பி.ஹெச்டி படித்தவர்களுக்கு உச்ச வயது 34 ஆகும்.

தேர்வு குறித்த விபரங்கள்

தேர்வு குறித்த விபரங்கள்

இந்தத் தேர்வானது தாள் 1, தாள் 2, தாள் 3 என மூன்று எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும். தேர்வு பாடத்திட்டம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம்:

பொது, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 850 ரூபாய் ஆகும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ரூ.100 விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்:

முக்கிய தேதிகள்:

  • ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 21 செப்டம்பர் 2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 11 அக்டோபர் 2019
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 11 அக்டோபர் 2019
  • ஜெனரல்/ DEPR/ DSIM துறைக்கான தாள் 1 தேர்வு நடைபெறும் நாள் : 9 நவம்பர் 2019
  • ஜெனரல் துறைக்கு மட்டுமான தாள் 2 தேர்வு தேதி : 1 டிசம்பர் 2019
  • DEPR/DSIM துறைக்கான தாள் 2 தேர்வு நடைபெறும் நாள் : 2 டிசம்பர் 2019
  • முக்கிய இணையதள முகவரிகள்

    முக்கிய இணையதள முகவரிகள்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI Recruitment 2019: 199 vacancies for Grade B officer post, Apply Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+