இராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் : இராமநாதபுரம் - மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - கூட்டுறவுச் சங்கம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 38
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
- நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 04
- தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி உதவியாளர் - 02
- கூட்டுறவு விற்பனைச் சங்க உதவியாளர் - 02
- தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க உதவியாளர் (எழுத்தர்)- 30
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
- விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.14,000 முதல் ரூ.47,500 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணையதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbramnad.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய கடை நாள் : 07.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 (விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.drbramnad.net/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












