ரயில்வே பாதுகாப்புப் படையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்...!!!

ரயில்வே பாதுகாப்புப் படை(Railway Protection Force) என்று அழைக்கப்படும் RPF -ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் (Sub Inspector, Constable) பணிக்கென காலியாக உள்ள 2250 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1tjLJxC-IwZA-x-txXmiU9R4oNGG3qhhd/view என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

ரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) அல்லது ஆர்.பி.எப் என்பது மத்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய ரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்ட படையாக இது செயல்பட்டு வருகிறது. லக்னௌவில் உள்ள ஜக்ஜீவன் ராம் ரயில்வே பாதுகாப்புப் படைப் பயிற்சிப்பள்ளியில் ஆரம்பப் பயிற்சி, புதுமுகப் பயிற்சி, சிறப்புப் பயிற்சிகள் ஆகியவை அளிக்கப்படுகின்றன.

ரயில்வே பாதுகாப்புப் படையில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்...!!!

மொத்தம் 65,000 வீரர்களைக் கொண்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையின் குறிக்கோள்கள் மற்றும் கடமையாக ரயில் பயணிகள், பயணிகள் பகுதி மற்றும் ரயில்வே சொத்து ஆகியவற்றை பாதுகாக்க குற்றவாளிகளுடன் சண்டையிடுதல்,
சமூக விரோத கூறுகள் அனைத்தையும் நீக்கி ரயில்வே பயணிகளுக்கும், ரயில்வே சொத்துக்களுக்கும் பாதுகாவல் தருதல், மகளிர் மற்றும் குழந்தை கடத்தலைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருத்தல் மற்றும் ரயில்வே பகுதிகளில் காணப்படும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து மறுவாழ்வு அளித்தல், இதர ரயில்வே அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றி இந்திய ரயில்வேயின் மதிப்பை அதிகரித்தல், அரசு ரயில்வே காவலர்கள்/ உள்ளூர் காவலர்காளுக்கும் மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கும் பாலமாக செயல்படுதல், அனைத்து நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றியும், சிறந்த மனித உரிமை நடைமுறைகளைக் கொண்டும், மேலாண்மை உத்திகளுடன் பயணிகளை பாதுகாத்தல் ஆகியவை உள்ளன.

இந்த பெருமைவாய்ந்த ரயில்வே பாதுகாப்புப் படையில்தான் (Railway Protection Force) சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் (Sub Inspector, Constable) பிரிவில் 2250 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் (Sub Inspector), கான்ஸ்டபிள் (Constable) பணிக்கான கல்வி தகுதி:

சப்-இன்ஸ்பெக்டர் (Sub Inspector), கான்ஸ்டபிள் (Constable) பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் (Sub Inspector), கான்ஸ்டபிள் (Constable) பணிக்கான வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Railway Protection Force-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் தேர்வு, உடல் அளவீடு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு (Computer Based Test, Physical Efficiency Test & Physical Measurement Test, Document Verification, Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.01.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1tjLJxC-IwZA-x-txXmiU9R4oNGG3qhhd/view என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RPF Recruitment 2024 Notification is released for 2250 posts. Candidates who aspire to become Sub-Inspector or Constable in the Railway Protection Force (RPF) and Railway Protection Special Force (RPSF) can apply online through the official website at rpf.indianrailways.gov.in. This recruitment drive aims to fill a total of 2250 vacancies, with 2000 for the Constable post and 250 for the Sub-Inspector post.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+