மத்திய அரசின் கீழ் செயல்படும் ரயில்டெல் கார்ப்பரஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (RailTel Corporation of India Limited-RailTel) எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.railtelindia.com/images/careers/Vacancy notice-EDER - V.5.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய ரயில் டெல் நிறுவனமானது, நாட்டில் செயல்பட்டு வரும் மிகச் சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்டெல் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா (RailTel Corporation of India Ltd) என்ற நிறுவனமானது பிராட்பேண்ட் மற்றும் விபிஎன் சேவைகளை வழங்கும் ஒரு மிகச் சிறந்த இந்திய பொதுத்துறை நிறுவனமாக விளங்குகிறது.
நாடு முழுவதும் பிராட்பேண்ட், தொலைத்தொடர்பு மற்றும் மல்ட்டிமீடியா நெட்வொர்க்கை உருவாக்குதல் மற்றும் இந்திய ரயில்வேயின் ரயில் கட்டுப்பாட்டு செயல்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டது. ரயில்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள 5,000 நிலையங்கள் வழியாக அனைத்து முக்கிய வணிக மையங்களையும் உள்ளடக்கி அமைந்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வேயானது, தொடக்கத்தில் தொலைத்தொடர்புத் துறையை (தற்போது பிஎஸ்என்எல்) தங்கள் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத் தொடர்புச் சுற்றுகளுக்கு சார்ந்திருந்தது. இந்நிலையில் தனது சர்க்யூட் செயல்திறனை அதிகரிக்க, ரயில்வே தனது சொந்த தகவல் தொடர்பு அமைப்புகளை 1970 களின் முற்பகுதியில் இருந்து மேல்நிலை தொலைபேசி இணைப்புகள், குவாட் கேபிள்கள் மற்றும் மைக்ரோவேவ் சிக்னலிங் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கத் தொடங்கியது.
1983-ம் ஆண்டில், ரயில்வே சீர்திருத்தக் குழு, ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) அடிப்படையிலான தகவல்தொடர்புகளை அறிமுகப்படுத்த முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து மத்திய தகவல் தொடர்பு துறையிலிருந்து சுதந்திரமான அமைப்பை உருவாக்கும் பொருட்டு ரயில்டெல் நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த பெருமைவாய்ந்த ரயில்டெல் கார்ப்பரஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்தான் (RailTel Corporation of India Limited-RailTel) தற்போது எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்கள் காலியாக உள்ளன.
எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும்
விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பாடப்பிரிவில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பி.இ., பி.டெக், பி.எஸ்சி (BE, B.Tech, B.Sc) பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்களுக்கான வயது வரம்பு
இந்த ரயில்டெல் (RailTel) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் அவசியமாகும்.
எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்களுக்கான சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.1,50,000/- முதல் ரூ.3,00,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.
எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்களுக்கான தேர்வு முறை:
எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு (Interview )மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம்:
எக்சிகியூட்டிவ் டைரக்டர் ( Executive Director) பணியிடங்களுக்கான விண்ணப்பக்கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.600 செலுத்தவேண்டும். மற்ற நபர்கள் ரூ.1,200/- செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த ரயில்டெல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 12.1.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.railtelindia.com/images/careers/Vacancy notice-EDER - V.5.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












