வட இந்தியாவில் செயல்பட்டுவரும் இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி. இந்த வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 168 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : சிறப்பு அதிகாரி - வங்கி
மொத்த காலிப் பணியிடம் : 168
கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.psbindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வரவேற்கப்படும் கடைசி நாள் : 10.10.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 826
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி., எஸ்.சி., பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 177
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.psbindia.com/content/recuitment அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications
