புதுச்சேரியில் செயல்பட்டு வரும் சமூக நல இயக்குநரகத்தில் காலியாக உள்ள சமூகநல அதிகாரிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 48 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சமூக நல இயக்குநரகம், புதுச்சேரி
பணி : சமூகநல அதிகாரி
மொத்த காலிப் பணியிடங்கள் : 48
கல்வித் தகுதி : சமூகவியல், சமூக பணி, உளவியல், மனை அறிவியலுடன் ஊட்டச்சத்து மற்றும் குழந்தை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.20,000
விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.py.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது அஞ்சல் உறையின் மீது "Application for the Engagement of Welfare Officer on contract Basis" என்று குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : The Director, Directorate of Social Welfare, Saradhambal Nagar, Ellaipillaichavady, Puducherry - 605 005.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.03.2020
தேர்வு முறை : கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் தகுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.py.gov.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












