மத்திய அரசின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி அமைப்பில் பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்கள் காலியாக உள்ளன. இங்கு மொத்தம் 7 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/12/PTC-shillong.pdf என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.
பிரசார் பாரதி (prasar Bharati), இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தினால் தனியாகச் சட்டம் இயற்றப்பட்டு தன்னிச்சையாக செயல்படும் ஓர் அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போன்று இந்தியாவிற்குச் சொந்தமாகச் செயல்படும் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தை ஏற்படுத்தும் விதத்தில் நவம்பர் 23, 1997 ஆம் ஆண்டு பிரசார் பாரதியை இந்திய அரசு விரிவுபடுத்தியது.
இதன்மூலம் இந்தியாவிற்கென தனியாக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் கிடைத்தது. இதன் கீழ் ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து தனது செயல்பாடுகளை, ஒளிபரப்பை படிப்படியாக விரிவுபடுத்தி வந்தது.

பிரசார் பாரதியின் தூர்தர்ஷன்(டிடி) சேனல்கள் மூலம் டிஷ் சேவையும் (டிடிஎச்) வழங்கப்படுகிறது. இந்நிலையில் டிடி இலவச டிஷ் திறன் தற்போதுள்ள 116-ல் இருந்து சுமார் 250 சேனல்களாக விரிவு படுத்தப்படுகிறது. இது 4.30 கோடி இணைப்புகளைக் கொண்டுள்ளது, இது நாட்டின் மிகப்பெரிய டிடிஎச் தளமாக உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 28 பிராந்திய தூர்தர்ஷன் சேனல்கள் எச்டி புரோகிராம் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாற்றப்படுகின்றன, அதே நேரத்தில் அதன் பல எர்த் ஸ்டேஷன்கள் எச்டிடிவி சேனல்களை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் மேம்படுத்தப்பட உள்ளன அல்லது மாற்றப்பட உள்ளன
இந்த பெருமைமிகு பிரசார் பாரதி அமைப்பில்தான் தற்போது குதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
பிரசார் பாரதியின் பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பி.ஜி. டிப்ளமோ/ பட்டப்படிப்பு (PG Diploma / Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்களுக்கான வயது வரம்புத்தகுதி:
பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்களுக்கு ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பிரசார் பாரதி (Prasar Bharati)-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் முறை:
பகுதி நேர செய்தியாளர் (Part time Correspondents) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த (Contract) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 19.1.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/12/PTC-shillong.pdf என்ற இணையதள முகவரியில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












