பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அழைப்பு...!

பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் (Marketing Executive) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

பிரசார் பாரதி (prasar Bharati), இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தினால் தனியாகச் சட்டம் இயற்றப்பட்டு தன்னிச்சையாக செயல்படும் ஓர் அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போன்று இந்தியாவிற்குச் சொந்தமாகச் செயல்படும் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தை ஏற்படுத்தும் விதத்தில் நவம்பர் 23, 1997 ஆம் ஆண்டு பிரசார் பாரதியை இந்திய அரசு விரிவுபடுத்தியது.

பிரசார் பாரதியில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அழைப்பு...!

இதன்மூலம் இந்தியாவிற்கென தனியாக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் கிடைத்தது. இதன் கீழ் ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷன் ஆகியவை கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து தனது செயல்பாடுகளை, ஒளிபரப்பை படிப்படியாக விரிவுபடுத்தி வந்தது.

பிரசார் பாரதியின் தூர்தர்ஷன்(டிடி) சேனல்கள் மூலம் டிஷ் சேவையும் (டிடிஎச்) வழங்கப்படுகிறது. இந்நிலையில் டிடி இலவச டிஷ் திறன் தற்போதுள்ள 116-ல் இருந்து சுமார் 250 சேனல்களாக விரிவு படுத்தப்படுகிறது. இது 4.30 கோடி இணைப்புகளைக் கொண்டுள்ளது, இது நாட்டின் மிகப்பெரிய டிடிஎச் தளமாக உள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 28 பிராந்திய தூர்தர்ஷன் சேனல்கள் எச்டி புரோகிராம் தயாரிக்கும் திறன் கொண்டதாக மாற்றப்படுகின்றன, அதே நேரத்தில் அதன் பல எர்த் ஸ்டேஷன்கள் எச்டிடிவி சேனல்களை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் மேம்படுத்தப்பட உள்ளன அல்லது மாற்றப்பட உள்ளன.

இந்த பிரசார் பாரதியின் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் (Marketing Executive) பிரிவில்தான் தற்போது 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA / PG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அடுத்த 15 நாட்களுக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அறிவிப்பு வெளியான 15 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட

https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/12/ME-Delhi.pdf
https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/12/ME-Mumbai.pdf
https://prasarbharati.gov.in/wp-content/uploads/2023/12/ME-Grade-I-Delhi.pdf
இணையதள லிங்குகளை பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Prasar Bharati invites applications for the Marketing Executive posts via direct recruitment: Minimum 1 Year Experience in direct sales. Preference will be given to the candidate having experience in direct selling with media organization.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+