மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ. பவர் எலக்ட்ரானிக் மற்றும் பி.இ துறையில் மின்சாரவியல் தொடர்பான படிப்புகள் மேற்கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
மேலாண்மை : மத்திய அரசு
கல்வித் தகுதி : பி.இ. பவர் எலக்ட்ரானிக்ஸ், பி.இ மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 15.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : கேட் 2020 மதிப்பெண், குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.500
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.powergridindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












