புதுவைப் பல்கலைக்கழகத்தில் இந்திப் பாட கவுரவப் பேராசிரியர்(Guest Faculty ) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புதுவைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் (central university) ஒன்றாகும். 1985ல் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கிளை வளாகங்கள் புதுவை, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளில் உள்ளது. இப்பல்கலைக்கழகம் PU என்று பரவலாக அழைக்கப்படுகிறது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் அப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேரா.குருமித் சிங் துணைவேந்தராகவும் இருக்கின்றனர்.

புதுவை பல்கலைக்கழகத்தில் வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம், புள்ளியியல், கணிப்பொறி அறிவியல் மற்றும் சமூகம்-பொருளாதார நிர்வாகம்-சட்டம், ஆகிய பாட பிரிவுகளில் ஐந்தாண்டு - ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன.
புதுவைப் பல்கலைக்கழகம் அல்லது பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் (PU) புதுச்சேரி, மாஹி, ஏனாம், காரைக்கால், யூனியன் பிரதேசமான அடமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் முழுவதும் 89 இணைப்புக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது.
புதுச்சேரியில் அமைந்துள்ள பிரதான வளாகம், 800 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு கடற்கரை சாலையில் வங்காள விரிகுடாவை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து இதை அணுகலாம். வளாகத்தில் ஷாப்பிங் சென்டர், வங்கி, தபால் அலுவலகம், உடற்பயிற்சி கூடம் மற்றும் 24 மணி நேர மருத்துவமனை, முழு வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் உள்ளது.
புதுச்சேரியில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் போர்ட் பிளேர் மற்றும் காரைக்காலில் இரண்டு சிறிய வளாகங்கள் உள்ளன.
உள்ளூர் சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு சேவை செய்ய ஒரு சமூகக் கல்லூரியை அமைத்த இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் PU ஆகும். ஆன்சைட் மருத்துவமனை வசதிகளைப் பயன்படுத்தி பாராமெடிக்கல் படிப்புகள் போன்ற பல தொழிற்கல்வி திட்டங்கள் மூலம் உள்ளூர் திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன. இது பெண்கள் மற்றும் ஊனமுற்ற மாணவர்களுக்கு இலவச தங்குமிடத்தையும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து வசதியையும் வழங்குகிறது.
இந்த பெருமைமிகு புதுவைப் பல்கலைக்கழகத்தில் கவுரவப் பேராசிரியர் (Guest Faculty -Hindi) பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இந்தி-Hindi பாடப்பிரிவில் Post Graduate Degree, Ph.D டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 7-ம் தேதிக்குள் (07.12.2023) தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கூடுதல் விவரங்களுக்கு https://www.pondiuni.edu.in/wp-content/plugins/pdf-poster/pdfjs/web/viewer.html?file=https://www.pondiuni.edu.in/wp-content/uploads/2023/11/Notification-Walkin-Interview.pdf&download=true&print=false&openfile=false என்ற இணையதள லிங்க்கை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












