உங்களுக்கு ஆன்லைன் கேம்ஸ் விளையாட பிடிக்குமா? அப்ப வாங்க உங்களுக்கான இடம் இதுதான்!

Posted By: Kripa.Saravanan

2021ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டு துறை 1 பில்லியன் டாலர் மதிப்பை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூகிள் கேபிஎம்ஜி தெரிவிக்கிறது.
தற்போது இதன் மதிப்பு 360 மில்லியன் டாலர் ஆகும். மேலும் அந்த ஆண்டில் இந்த துறையின் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 310 மில்லியனாக உயரும் என்றும் கூறப்படுகிறது. ஐடி நிறுவனங்களின் அழகில் கவரப்பட்டு இளைஞர்களுக்கு அதன் கிளையாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஆன்லைன் விளையாட்டு .

இன்று உலகளாவிய ஒரு விளையாட்டாக இது மாறியுள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு துறையில் தற்போது முக்கிய இடத்தை பிடிப்பது அமெரிக்காவும் ஜப்பானும். தற்போது 160 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன் 3% இடத்தை மட்டுமே கொண்டுள்ள இந்திய நாடு இன்று வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறை இந்த ஆன்லைன் விளையாட்டு துறை ஆகும்.

இதன் உட்கதையை இப்போது பார்க்கலாம்...

தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் மற்றும் தொடக்க நிலையில் இருக்கும் நிறுவனங்கள் என்று அனைவரும் கன்சோல் வீடியோ, டெஸ்க்டாப் , ஆன்லைன், மொபைல், வயர்லெஸ் விளையாட்டுகள் என்று அனைத்தையும் அதிகபட்ச வேகத்திற்கு வழங்கி வருகின்றன. டிஜிட்டல் இணைப்புகள் பரவலாக அதிகரித்து வரும் இந்நாட்களில் ஆன்லைன் விளையாட்டு துறை சந்தையும் மேம்படுவதற்கான வழிகள் அதிகம் உள்ளது. வேகமாக வளர்ந்துவரும் உலகளாவிய விளையாட்டு தொழிற்துறையின் இந்த அமைப்பில் , இந்தியாவின் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள் எண்ணற்றவை என்று நம்பப்படுகிறது.

மற்ற துறைகளை போல் இந்த துறையிலும் நிபுணராக, அதிக அளவு ஒழுக்கம், பயிற்சி போன்றவை தேவைப்படுகிறது. வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த துறை மிகவும் கவர்ச்சி நிறைந்தாக பார்க்கப்பட்டலும், இதில் சில சிரமங்கள் இருக்கவே செய்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவின் ஆன்லைன் விளையாட்டு துறையின் தினசரி பயனர்கள் மற்றும் மாதந்திர பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், விளையாட்டில் பங்கு பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அதாவது, இந்த துறையின் வருவாய் குறைவாக இருந்தது. ஆனால் இன்று இருக்கும் உண்மையான பண பரிசு போட்டி தொடங்கப்பட்டவுடன், இதன் வருவாய் அதிகரித்துள்ளது. பாரம்பரிய ஆன்லைன் விளையாட்டுகளான சொலிடர் , லூடோ போன்றவற்றிலும் பணம் வைத்து விளையாடும் முறை இன்று உள்ளது. இதனால் இந்த விளையாட்டுகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

 

கல்வித் தகுதி :

அறிவியல், நுண்கலை, வணிகவியல், எஞ்சினியரிங் போன்ற எந்த துறையில் பட்டபடிப்பு பெற்றிருந்தாலும் இந்த துறையில் சேரலாம். தகவல் தொழில்நுட்பம், எஞ்சினியரிங் அறிவியல் பட்டபடிப்பை பெற்றவர்களுக்கு விளையாட்டு வடிவமைப்பு மற்றும் ப்ரோக்ராம் பற்றிய புரிதல் இருப்பது கூடுதல் நன்மையை கொடுக்கிறது. நுண்கலை பின்புலன் கொண்டவர்களுக்கு வரைகலை மற்றும் கருத்துகள் பிரிவில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். போர்ட்டிங் மற்றும் சோதனை பிரிவில் எஞ்சினியரிங் பின்புலன் கைகொடுக்கும். டொமைன் பற்றிய புரிதலுடன் வணிக மேலாண்மை படித்தவர்கள், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறையை தேர்ந்தெடுக்கலாம்.

ஆன்லைன் விளையாட்டு துறையில் படிப்பு மற்றும் தயாரிப்புத் திட்டங்களின் பட்டியல்!

தகவல் தொடர்பு வடிவமைப்பு அல்லது கிராஃபிக் வடிவமைப்பு, மல்டிமீடியா, புதிய மீடியா வடிவமைப்பு மற்றும் அனிமேஷன் ஃபிலிம் வடிவமைப்பு ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் வடிவமைப்பில் டிப்ளமோ படிப்பை கீழே உள்ள கல்லூரிகளில் படிக்கலாம்.

1. சார் ஜே.ஜே.. இன்ஸ்டிட்யுட் ஆப் டிசைன் , அஹமதாபாத்
2. நேஷனல் இன்ஸ்டிட்யுட் ஆப் டிசைன் , அஹமதாபாத்
3. எம் எஸ் யுனிவெர்சிட்டி ஆப் பரோடா
4. அகடெமி ஆப் அணிமஷன் அண்ட் கேமிங் . இதன் கிளைகள் நொய்டா,தில்லி, போபால், மற்றும் லக்னோ வில் உள்ளன.
5. ஏஷியன் இன்ஸ்டிட்யுட் ஆப் கேமிங் அண்ட் அணிமஷன் , பெங்களூர்
6. என் ஐ ஐ டி
7. சிம்பயொசிஸ் இன்ஸ்டிட்யுட் ஆப் டிசைன், பூனே
8. அப்டேக் ஸ்கில் பில்டர் ஸ்டடி கோர்ஸ்

தொடக்கத்தில் வடிவமைப்பாளர் மற்றும் ப்ரோக்ராமர் வேலைக்கு வருடத்திற்கு 2 லட்சம் சம்பளம் கிடைக்கலாம். அடுத்த 2 வருடத்தில் 3-6 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

 

சவால்கள் :

இந்த பிரிவில் உள்ள மிகப்பெரிய சவால்கள் , பொதுவாக இத்தகைய விளையாட்டுகளை பற்றிய எதிர்மறை கருத்துகள் மற்றும் போக்கர் பற்றியது ஆகும். இதனை தொடங்கும்போது, நமது முதலீட்டாளர்கள், வங்கிகள் மற்றும் அனைவருக்கும் சட்டப்பூர்வ கட்டமைப்பைக் காட்டுவதன் மூலம் அவர்களுக்கு இந்த துறையை பற்றிய தெளிவை புகட்டலாம். சூதாட்டம் மற்றும் 'திறமையின் விளையாட்டுகள்' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைப் பற்றி மக்களுக்கு கற்பிக்க வேண்டியிருந்தது.

புள்ளிவிவரங்களின் படி, பெரிய பங்கு மற்றும் கடன் நிதிகள் நிர்வகிக்கும் தொழில்முறை நிதி மேலாளர்களை விட போக்கரில் விளையாடும்போது வெல்வதில் அதிக திறன் உள்ளது "என்று ஒரு ஆன்லைன் போக்கர் தளமான Adda52.com இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி அனுஜ் குப்தா கூறுகிறார். இவற்றை பற்றிய கருத்துகள் மிகவும் மெதுவாக பரவுகிறது இதனால், பாரம்பரிய ஊடகங்கள், கூகிள் அல்லது பேஸ்புக்கில் முக்கிய பிரச்சாரங்களை மேற்கொள்ள கடினமாக உள்ளது.

 

இந்த துறையில் வேலை வாய்ப்புகள் :

ஆன்லைன் விளையாட்டுகள் கருத்தியல் மற்றும் காட்சிப்படுத்தல் மூலம் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன, மேலும் கிராபிக்ஸ், அனிமேஷன் மற்றும் நிரலாக்கத்திறன் ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும், மேலும் இறுதியில் வீடியோ, டெஸ்க்டாப், மொபைல் போன்ற பல மேடைகள் மற்றும் ஊடகங்களில் பரிசோதித்துப் பார்க்கப் படுகின்றன.

இந்த துறையில் வேலை செய்ய விரும்புகிறவர்கள், கேம் கோடர், குழுவின் தலைவர் அல்லது முன் தயாரிப்பு கருத்து கலைஞர், டிசைனர், டெக்னாலஜிஸ்ட் / ப்ரோக்ராமர், மாடலர், அமைப்பு கலைஞர், லைட்டிங் சூழல் கலைஞர், ஆக்கத்திறன் எழுத்தாளர் மற்றும் எப்எக்ஸ் கலைஞர் போன்ற வேலைகளை தேர்வு செய்யலாம்.

 

 

பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்தது...

முன்னதாக, ஒரு விளையாட்டை உருவாக்குவது என்பது விற்பனையை அதிகரிக்க செய்யும் ஒரு சூழலை உருவாக்குவது போலாகும். பின்னர் இன்-அப் மாதிரிகள் விற்பனைக்கு வந்தன. இவற்றில் உள்ள விளையாட்டு தொடர்பான மெய்நிகர் பொருட்கள் , அதை சிறப்பாக விளையாட வழி வகுத்தன. தொடக்கத்தில் இருத்த முறையில் தினசரி பயனர்கள் மற்றும் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், வருவாய் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது இந்த வியாபாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

வேறுபட்ட அணுகுமுறை....

உண்மையான பரிசு பணம் தருவது நடைமுறைக்கு வந்ததால், இதற்கு முந்தைய மாதிரிகளுக்கு சவால்கள் அதிகமானது. புதிய விளையாட்டுகள் மற்றும் பிரபலமான விளையாட்டுகளை எடுத்து வெற்றியடைவதில் ஒரு மிகப்பெரிய வாய்ப்பு உருவானது. மூலோபாயம் மாற்றப்பட வேண்டும், வேறுபட்ட அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். சரியான உத்திகள் மற்றும் வளங்களை கொண்டு ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு...

சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தியா, அதிக எண்ணிக்கை மற்றும் குறைந்த மதிப்பீடு கொண்ட வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. இந்த திறமைகளின் விளையாட்டில் பரிசு பணம் வழங்கிய பின்னர், புதிய வருவாய் சூழல் உதயமானது. இந்திய விளையாட்டு சந்தையில் மேலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளது .

English summary
Are You Imterested in Playing Games in Online? Why Just You are Playing? You Can Earn Also. These are the Online Gaming Job Offers For You.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia