இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் பணிபுரிய விருப்பம் உள்ள, செவிலியர்களிடம் (நர்ஸ்) இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தகவலை சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மகேஸ்வரன் தெரிவித்து உள்ளார். கூடுதல் விவரங்களைப் பெற www.omcmanpower.tn.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவைப்படும் மனிதவளத்தினை அளிப்பதற்கும் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது

இந்நிலையில் இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் இருந்து செவிலியர் பணியிடங்களுக்கு தேவைப்பட்டியல் வந்துள்ளது. அங்கு பணிக்கு செல்வதற்கு, அந்தந்த நாட்டுக்குரிய சிறப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே, இந்நாடுகளில் செவிலியர் பணிக்கு செல்ல விருப்பம் உள்ள செவிலியர்களுக்கும், செவிலியர் படிப்பு படிப்போருக்கும், அந்த சிறப்பு தேர்வுக்கான பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், தங்களின் சுய விபர விண்ணப்பத்தை, [email protected] என்ற இ - மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். மேலும் தகவல்களை, www.omcmanpower.tn.gov.in இணையதளம் வழியாகவும், OMCL என்ற மொபைல் ஆப்ஸ் வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












