மத்திய அரசு நிறுவனத்தில் அற்புதமான வேலை இருக்கு...!!!

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கான்டிராக்சுவல் பாராமெடிக்கல் லெபாரட்டரி டெக்னீசியன் (Contractual Paramedical Laboratory Technician) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு

https://www.oil-india.com/Document/Career/e0d14ead51deecea36b8120efc586d2ae901ac02b38d7d333e569d1306d3a969.pdf

என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்

ஆயில் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited- (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு நிறுவனத்தில் அற்புதமான வேலை இருக்கு...!!!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்ற அந்தஸ்துள்ள நிறுவனமாகும்.

இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது.

9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பு அந்தஸ்தை பெற்றதாகும். இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வாராய்ச்சி செய்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் ஆகியவை முக்கியப் பணிகளாகும்.

அசாம் மாநிலத்தின், திக்பை எனுமிடத்தில் 1889-ல் முதன் முதலில் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சியினரால் எரி எண்ணெய் தோண்டி எடுக்கப்பட்டதன் மூலம் ஆயில் இந்தியா நிறுவனத்தின் வரலாறு உருவானது.
2014 ஆண்டு முடிவில் ஆயில் இந்தியா நிறுவனம் 3.446 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயையும், 2625.81 மில்லியன் மெட்ரிக் டன் இயற்கை எரிவாயுவையும் மற்றும் 46,640 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவையும் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிறுவனம் தனது உற்பத்தியில் 80 சதவீதத்தை வடகிழக்கு இந்தியாவில் உற்பத்தி செய்கிறது. மேலும் ஒடிசா, அந்தமான், தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனம் பகுதிகளிலும், அரபிக் கடலையொட்டிய கடற்கரை பகுதிகளிலும், பிரம்மபுத்திரா ஆற்றுப் படுகைகளிலும், மிசோரம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் மலைப்பகுதிகளிலும் எரி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறது.

இந்த சிறப்புவாய்ந்த ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்தான் தற்போது பாராமெடிக்கல் லெபாரட்டரி டெக்னீசியன் (Contractual Paramedical Laboratory Technician) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுத்தகுதி:

30/12/2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகி பெற முடியும்.

பணியிடங்களுக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10, 12-வது (10+2) மற்றும் பேச்சிலர் இன் மெடிக்கல் லெபாரட்டரி டெக்னாலஜி (Bachelor in Medical Laboratory Technology -MLT (3 years course) தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.

தேர்வு முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணலுக்குத் தேர்வாக வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள்(30.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஊதிய விவரம்:

ஒரு நாளைக்கு ரூ.640/- ஊதியத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.16,640/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துணை ஆவணங்கள்/சான்றிதழ்கள் /சான்றிதழ்களுடன் 30/12/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு

https://www.oil-india.com/Document/Career/e0d14ead51deecea36b8120efc586d2ae901ac02b38d7d333e569d1306d3a969.pdf

என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Oil India Limited (OIL) has published an employment notification to fill the vacant post of Contractual Paramedical Laboratory Technician purely on a contractual basis for immediate engagement at Field Headquarters, Duliajan, Assam. Candidates interested and eligible can apply for Oil India Limited Recruitment 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+