மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தில் (NTRO) காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மெமாத்தம் 45 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகம் (NTRO)
மொத்த காலிப் பணியிடங்கள் : 45
பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-
- Technician A - 20
- Technician B - 12
- Technician C - 07
- Technician D - 06
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஏதேனும் ஓர் துறையில் ஐடிஐ அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.1,12,400 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ntro.gov.in/ntroWeb/loadRecruitmentsHome.do எனும் இணையதளத்தின் மூலம் 12.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 12.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் ttps://ntro.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.