மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு ரூ.1.89 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பி.இ பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)
மொத்த காலிப் பணியிடம் : 03
காலிப் பணியிட விபரம் :-
- Executive Excavation - 01
- Executive mine planning - 02
கல்வித் தகுதி : பி.இ. மெக்கானிக்கல் பொறியியல், பி.இ.சுரங்க பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 47 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,70,000 முதல் ரூ.1.89,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தில் நிர்வாகி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ntpc.co.in என்னும் இணையதளம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpc.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.