இஸ்ரோ மையத்தில் வேலை செய்ய விருப்பமா இருக்கா...!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் (என்ஆர்எஸ்சி) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.nrsc.gov.in/ என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (Indian Space Research Organization, ISRO) இந்திய அரசின் முதன்மையான தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆகும். பெங்களூருவில் தலைமைப் பணியகம் கொண்ட இஸ்ரோ 1969 ல் உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ 41 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் செயலாற்றப்படுகிறது இந்த இஸ்ரோ நிறுவனம். இந்திய அரசின் விண்வெளித்துறையின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் இஸ்ரோவுக்கு சோம்நாத் தலைவராக உள்ளார்.

இஸ்ரோ மையத்தில் வேலை செய்ய விருப்பமா இருக்கா...!!!

இஸ்ரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும்.இஸ்ரோ தனது நிறுவனக் காலத்திலிருந்து தொடர்ந்து பல சாதனைகளைக் கண்டு வந்துள்ளது.

1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இஸ்ரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணில் செலுத்தப்பட்டது.1980-ல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ். எல். வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகிணியை விண்ணில் செலுத்தியது.உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது.

கடந்த ஆண்டுகளில் இஸ்ரோ இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி பிறநாட்டு வாடிக்கையாளர்களுக்கும் விண்வெளி/ செயற்கைக் கோள் தொடர்புடைய செயல்பாடுகளை ஆற்றி வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்டத்தை கையில் எடுக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற ஆகஸ்ட் 23-ம் தேதியை இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இஸ்ரோவின் கீழ்தான் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் (என்ஆர்எஸ்சி) செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த பெருமைமிகு தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில்தான் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.'டெக்னீசியன் - பி' பிரிவில் எலக்ட்ரானிக் மெக்கானிக் 33, எலக்ட்ரிக்கல் பிரிவில் 8, இன்ஸ்ட்ருமென்டேசன் மெக்கானிக் பிரிவில் 9, போட்டோகிராபி பிரிவில் 2, பப்ளிஷிங் ஆபீஸர் பிரிவில் 2 என மொத்தம் 54 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ. முடித்திருக்க வேண்டும்.

வயதுத்தகுதி:31.12.2023 அடிப்படையில் 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை:ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு என்ற முறையில் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்களை தேசிய ரிமோட் சென்சிங் மையம் தேர்வு செய்யும்.
தேர்வு மையம்:இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு மையங்களாக சென்னை, மதுரை ஆகிய நகரங்கள் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் முறையில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக
ரூ. 100 செலுத்த வேண்டும்.

மேலும் பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை
கடைசி நாள்:விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் இம்மாதம் 31 ஆகும்.(31.12.2023).
கூடுதல் விவரங்களுக்கு https://www.nrsc.gov.in/ என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Notification for recruitment of 53 Technician-B under the National Remote Sensing Center is released officially by the Indian Space Research Organisation, those who are eligible and interested need to apply online between 9 and 31 December 2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+