மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளின் ரீபைனரி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்பழகுனர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 101 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : ரீபைனரி லிமிடெட் நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 132
பணி : தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்)
காலிப் பணியிட விவரம்:-
- ஐடிஐ - 27
- டிப்ளமோ - 34
- எல்எல்பி, உணவக மேலாண்மை - 04
- பி.காம்- 12
- பி.ஏ., எம்.ஏ - 02
- பி.எஸ்சி - 16
- எம்பிஏ - 16
கல்வித் தகுதி : அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள பயிற்சி அளிக்கப்படும் துறைகளில் சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : மேற்கண்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் தொழில்பழகுனர் பணிக்கு 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.nrl.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://portal2.nrl.co.in/ApprenticeTrainee/AppForm_new.aspx என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












