தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் அப்ரென்டிஸ் பணியிடம்...!

திருச்சியின் பெருமைகளுள் ஒன்றான தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்ஆர்சிபி) 'அப்ரென்டிஸ்' பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்த அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு nrcb.icar.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையமானது (National Research Center for Banana - NRCB) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரையின்படி 1993 ஆகஸ்ட் 21-ம் தேதி திருச்சி தாயனுர் அருகே உள்ள போதாவூர் என்ற ஊரில் தொடங்கப்பட்டது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும். வாழையின் மகசூல் பெருக்கம் மற்றும் ஊட்ட்சத்து பெருக்கம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுதல் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும்.

இந்த மையம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் அதற்குரிய குறிப்பிட ஆராய்ச்சிகளை இன்றளவும் செய்து வருகிறது. அவையாவனபயிர் மேம்படுத்துதல் பிரிவு, பயிர் பெருக்கம் பிரிவு, பயிர் கப்பியல் பிரிவு, அறுவடை செய்த பின் மேம்பாடுகள் ஆகியவை அந்த 4 ஆராய்ச்சிகளாகும்.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் அப்ரென்டிஸ் பணியிடம்...!

இந்த ஆராய்ச்சி மையம் நன்கு மேம்படுத்தபட்ட ஆய்வகங்களைக் கொண்டுள்ளது. அதில் ஒரு சில ஆய்வகங்களாக திசு வளர்ப்பு ஆய்வகம், உயிர் தொழில் நுட்பவியல் ஆய்வகம், மண் அறிவியல் ஆய்வகம், உயிர்வேதியியல் ஆய்வகம், பூச்சியியல் ஆய்வகம், நேமதொடி ஆய்வகம், பூஞ்சை மற்றும் பாக்டீரியா சம்பந்தபட்ட ஆய்வகம் போன்றவை அடங்கும்.

வாழைப்பழ ரகங்கள் தொடர்பாக சுமார் 1990-களில் இந்தியா முழுவதும் களப்பணிகள் மற்றும் ஆய்வுகளை இந்த தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் போன்ற இடங்களில் உள்ள காட்டு வாழைகள், மற்றும் வெளிநாடுகளில் உள்ள வாழைகளும் பெல்ஜியத்தில் உள்ள ITC எனப்படும் உலகளாவிய போக்குவரத்து மையத்தில் இருந்தும், இந்தியாவின் NBPGR தேசிய bureu தாவர மரபணு வளம் மூலமாகவும் வாழைகள் கொண்டுவரப்பட்டன.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வாழைக்கு என நுண் சத்துக்கள் கொண்ட தாவர வளர்ச்சி ஊக்கி ஒன்றை கண்டுபிடித்து உள்ளது. இதற்கு, "வாழை சக்தி" என்று பெயர். இந்த தாவர வளர்ச்சி ஊக்கியில் ஜின்க், இரும்பு, போரோன், செம்பு போன்ற தாதுக்கள் மட்டும் அல்லாமல், மற்ற நுண் சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஆராய்ச்சி நிலையத்தின் முக்கிய பணிகளாக வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டினை அதிகரிக்கத் தக்க தொழில்நுட்பங்களை மேம்படுத்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல், பழங்கால மற்றும் உயிர்த் தொழில்நுட்ப முறைகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட ரகங்களை உருவாக்குதல் மற்றும் வேறுபாடுகளைப் பராமரித்தல், வாழை பற்றிய அனைத்துத் தகவல்களுக்கும் களஞ்சியமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் மகசூல் அளவை அதிகரிக்கும் தகவல்களைப் பரப்பவும்,தேசிய வாழை பண்பகப் பண்ணையாகவும் செயல்படுகிறது.

வாழையில் இடம் சார்ந்த ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றில் ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் ஆராய்ச்சியினை ஒருங்கிணைத்து வழிநடத்துவதாகவும் இந்நிலையம் திகழ்கிறது.

இந்த பெருமைமிகு தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன.

இங்கு தாவரவியல் 5, பயோடெக்னாலஜி 5, உணவு பதப்படுத்துதல் 4, பி.சி.ஏ., 2, வேளாண்மை / தோட்டக்கலை 7, நர்சரி மேனேஜ்மென்ட் பிரிவில் 2 என மொத்தம் 25 இடங்கள் காலியாக அமைந்து உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு கல்வித்தகுதியாக தொடர்புடைய பிரிவில் டிகிரி / டிப்ளமோ (வேளாண்மை, நர்சரி) முடித்திருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு தேர்ச்சி முறையாக கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு முறைகள் பின்பற்றப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் பணியிடங்களில் சேர்பவர்களுக்கு ஸ்டைபண்டாக (உதவித்தொகையாக) வேளாண்மை, நர்சரி பிரிவுக்கு மாதம் ரூ. 8000-ம். மற்ற பிரிவுக்கு ரூ. 9000-ம் வழங்கப்படும்.

ஆன்லைன் முறையில் மட்டுமே இந்த அப்ரென்டிஸ் பணியடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் இம்மாதம் 13-ம் தேதியாகும்(13.12.2023).
மேலும் விவரங்களுக்கு nrcb.icar.gov.in என்ற இணையதள லிங்க்கைக் காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Research Centre for Banana (NRCB) has recently issued a recruitment notice inviting applications for the posts of apprentice. For more details please log on to nrcb.icar.gov.in. Applicants should have relevant qualifications and a strong desire to contribute to agricultural research.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+