உளவியல் படிப்பில் பட்டம் பெற்ற பெண்களா நீங்க?

சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையில், உதவி இயக்குநர்-(பெண்கள் மட்டும்) 11 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.

 

நிர்வாகம் : சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை
மேலாண்மை : மாநில அரசு
பணி : உதவி இயக்குநர்- பெண்கள் மட்டும் (Assistant Director- Women candidate only)
மொத்த காலிப் பணியிடங்கள் : 11

ரூ.2 லட்சம் ஊதியத்தில் வேலை இருக்கு..! 

கல்வித் தகுதி

மனையியல், உளவியல், சமூகவியல், குழந்தை வளர்ச்சி, மறுவாழ்வு அறிவியல், சமூகப்பணி ஆகிய துறைகளில், முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தமிழில் எழுத, படிக்க போதுமான அறிவு பெற்றிருத்தல் அவசியம். காலிப் பணியிடங்களில், பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

 

டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நடத்தப்படும் எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் உத்தேசப்பட்டியல் தயாரிக்கப்படும்
காலிப்பணியிடங்கள், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில், தரவரிசை யின்படி சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர், 01.07.2022 படி, 32 வயது நிரம்பியவர், இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர்,, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. எனினும், கூடுதல் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள், www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை

கணினி வழியாக மட்டுமே தேர்வு நடத்தப்படும். கொள்குறி வகை மற்றும் நேர்முக தேர்வு என, மொத்தம் 510 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.

ஊதியம்

இந்தப் பதவிக்கு, அரசின் நிலை 22 ன் படி, ரூ.56100 -205700 ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

தேர்வு கட்டணம் ரூ.200; நிரந்தர பதிவு கட்டணம் ரூ.150 என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://www.tnpsc.gov.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/english/15_2022_AD_Social_Welfare_Eng.pdf

வயது வரம்பு தளர்வு, பணி காலம், தேர்வு கட்டண விலக்கு ஆகியவை குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக, அனைத்து வேலை நாட்களிலும், முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

ஒருமுறை பதிவு, இணையவழி விண்ணப்பம் குறித்த சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், இதர சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Vacancies of Assistant Director in Department of Social Welfare and Women's Rights for women with master's degree in the fields of Housing, Psychology, Sociology have been released.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X