மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னைக்கு அருகில் உள்ள இந்திய அணுமின்சார நிறுவனத்தில் (என்பிசிஐஎல்) பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் தகவல்களுக்கு https://npcilcareers.co.in/MainSiten/default.aspx என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station) அல்லது கல்பாக்கம் அணுமின் நிலையம் இந்தியாவின் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ள அணு மின்சக்தி நிலையமாகும். இந்தியாவில் நிலைகொண்டுள்ள இதர அணு ஆற்றல் ஆலைகளைப் போலவே, சென்னை அணுமின் நிலையமும் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இது இந்திய அணுமின் கழக நிர்வாகத்தின் கீழ் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பணிகள் 1970 ஆம் ஆண்டில் துவங்கின.

சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு மின்சக்தி நிலையம் ஆகும். இந்த ஆலை புளுட்டோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன், இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி, ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்ற பெருமைக்குரிய அணுசக்தியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலையாகும்.
இந்த ஆலை இந்திய அறிவியல் வல்லுனர்கள் வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளை கொண்டுள்ளது. இந்த ஆலையை முழுமையான பாதுகாப்புடன் செயல்படுத்தும் நோக்குடன் இவ்வாலையை சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க அமைத்ததாகும்.
இந்த ஆலையின் உலைகளின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலையை 1983 ஆம் ஆண்டில் தான் செயல் படுத்த இயன்றது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது.
இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணிகளில் இங்குள்ள வல்லுநர்கள் முனைவாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்த அணு உலைக்கு எரிபொருளாக தோரியம் பயன்படுத்தப்படும். நமது நாட்டின் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களின் கடற்கரை மணலில் இந்த தோரியம், மோனாசைட் வடிவில் கிடைக்கிறது.
இந்த பெருமைமிகு என்பிசிஐஎல் நிறுவனத்தில் (என்பிசிஐஎல்) சயின்டிபிக் டிரைய்னி பிரிவில் டெக்னீசியன் 31 இடங்கள், சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவில் 17 இடங்கள், சேப்டி சூப்பர்வைசர் பிரிவில் 1 இடம், அசிஸ்டென்ட் கிரேடு பிரிவில் 4 இடங்கள்என மொத்தம் 53 இடங்கள் காலியாக உள்ளன.
பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் பிரிவு வாரியாக டிப்ளமோ, ஐ.டி.ஐ., டிகிரி கல்வித்தகுதி ஒவ்வொரு பணியிடத்துக்கும் மாறுபடுகிறது.
வயதுத்தகுதி:
5.1.2024 அடிப்படையில் டெக்னீசியன் 18 முதல்- 24, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 18 முதல் 25, சேப்டி சூப்பர்வைசர் 18 முதல் 35, அசிஸ்டென்ட் கிரேடு 21 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை:
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் ஆட்கள் தேர்வு இருக்கும்.
பணியிடம்:
தேர்வு செய்யப்படும் நபர்கள் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கல்பாக்கம் அணுமின் ஆராய்ச்சி நிலையம், உற்பத்திப் பிரிவில் பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டமாக ரூ. 150 செலுத்தவேண்டும். மகளிர், எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை.
கடைசிநாள்:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 5.1.2024 மாலை 5:00 மணி.
இணையதள முகவரி:
கூடுதல் விபரங்களுக்கு npcilcareers.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












