மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Executive Trainee எனும் பயிற்சி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 259 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குப் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : என்எல்சி
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : நெய்வேலி
பணி : கிராஜூவேட் எக்சிகியூட்டிவ் டிரெய்னி
மொத்த காலிப் பணியிடங்கள் : 259
கல்வித் தகுதி : மேற்கண்ட பயிற்சி பணியிடத்திற்கு மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், கண்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், கம்ப்யூட்டர், மைனிங் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், ஜியாலஜி, நிதி, எச்.ஆர் போன்ற பிரிவிகள் முதுநிலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : 01.03.2020 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.854
- மற்ற பிரிவினர் ரூ.354 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.nlcindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : ஆன்லைன் வழியாக வரும் மார்ச் 18 (இன்று) முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nlcindia.com/new_website/careers/advt/GET-MAR-2020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.