என்எல்சியில் வேலை வேண்டுமா? இன்டெஷ்ட்ரியல் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு

Posted By: Kani

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பினான்ஸ் பிரிவில் காலியாக உள்ள 50 இன்டெஷ்ட்ரியல் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 27 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: இன்டெர்டெஷியல் டிரெயினி (பினான்ஸ்)

காலியிடங்கள்: 50

கல்வித் தகுதி: சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி அல்லது காஸ்ட் அக்கவுண்டன்சி தேர்வில் தேர்ச்சி

வயது வரம்பு: 28 வயதுக்குள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27-03-2018

தேர்வு செய்யும் முறை: இண்டர்மீடியட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முழுமையான விவரங்களுக்கு: அறிவிப்பு லிங்க் இதை கிளிக் செய்து பாருங்கள்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2.கேரியர்:

மேல் பக்கம் ஐந்தாவதாக உள்ள கேரியர் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

4.விண்ணப்பிக்கும் முறை:

இந்த இணையதளத்தில் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றி
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இன்னும் 8 நாட்களே அவகாசம்! மலேரியா ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணி

English summary
NLC India Limited Recruitment For Industrial Trainee Posts: Apply Before Mar 27

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia