திருச்சி என்ஐடிடியில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் !!

Posted By:

திருச்சி என்ஐடியில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு. திருச்சி என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சியில் செயல்படுகிறது.

என்ஐடிடி திருச்சியில் வேலை வாய்ப்புக்கு அறிவிப்பு

திருச்சியின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 177 பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. திருச்சியில் பணியிடம் கொண்ட தேசிய தொழில்நுட்ப நிறுவணத்தில் பணியிடம் பெற விருப்பமுள்ளோர் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருச்சியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள்:

ஆர்க்கிடெக்சர் 9
சிவில் இன்ஜினியர் 19
கெமிக்கல் இன்ஜினியர் 6
எனர்ஜி என்வைரன்மெண்ட் 5
கெமிஸ்ட்ரி 9
கம்பியூட்டர் சயின்ஸ் இன்ஜினயரிங் 11
எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் 14
எலக்டிரானிக்ஸ் & எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங் 15
ஹுயூமனிட்டிஸ் 7
இன்ஸ்ரூமெண்டேசன் & கன்ட்ரோல் இன்ஜினியரிங் 08
மெனேஜ்மெண்ட் ஸ்டிஸ் 10
கம்பியூட்டர் அப்பிளிகேசன் 9
மேத்மெடிக்ஸ் 11
ஃபிசிக்ஸ் 6
புரெடக்ஸன் 13

போன்ற பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 11ஆம் தேதி இறுதிதேதி ஆகும்.ஆன்லைனில் பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப வேண்டிய இறுதிநாள் நவம்பர் 21 ஆகும்.

வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர்க்கு இங்கு இணைப்பை கொடுத்துள்ளோம் . அவற்றில் கல்வித்தகுதி மற்றும் சம்பளம் அனைத்து விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி அனைத்து விவரங்களும் பூர்த்தி செய்து அனுப்பலாம்.

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் . என்ஐடிடியில் வேலை வாய்ப்பு பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி   பொறியியல் சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர்க்ள் விண்ணப்பிக்கலாம். 

திருச்சி என்ஐடியில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு அறிவிப்பானது வேலைவாய்ப்பு தேடுவோர்க்கு ஒரு நல்வாய்ப்பாகும். இதனை பயன்படுத்தி அனைத்து விவரங்களையும் முறைப்படி அறிவித்து அதனை அஞ்சலில் குறிப்பிட்ட தேதியில் அனுப்ப மறவாதீர்கள் . 

சார்ந்த பதிவுகள்:

இஸ்ரோவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு நேரடி தேர்வில் பங்கேற்க அழைப்பு !!

English summary
here article tell about job notification of NITT

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia