திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT Trichy) காலியாக உள்ள SRF மற்றும் JRF பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.13.500 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT Trichy)
பணி : SRF/ JRF
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Metallurgical/ Materials Engineering ஆகிய பாடங்களில் எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.13,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 01.07.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : டீன் அலுவலகம் (ஆர் & சி), தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி - 620015
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.nitt.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.