திருச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் காலிப் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம், 134 உதவி பேராசிரியர் (கிரேடு 2) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் - திருச்சி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 134
பணி : உதவி பேராசிரியர் (கிரேடு 2)
வயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சம்மந்தப்பட்ட பாடப் பிரிவுகளில் முதுகலை படிப்புடன், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500
- மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.1000
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை : https://www.nitt.edu என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 28.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitment.nitt.edu/faculty2019/advt/General%20Instructions%20and%20Information.pdf அல்லது https://www.nitt.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.