திருச்சி என்ஐடியில் துணை பதிவாளர், உதவி பதிவாளர் வேலை!

Posted By: Kani

என்ஐடி என அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சியில் 2018 -ஆம் ஆண்டிற்கான துணை பதிவாளர், உதவி பதிவாளர் மற்றும் இதர பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: என்ஐடி

பணியிடம்: திருச்சி

மொத்த காலியிடங்கள்: 10

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. துணை பதிவாளர் - 02
2. உதவி பதிவாளர் - 01
3. மூத்த மருத்துவ அதிகாரி - 01
4. மேற்பார்வைப் பொறியாளர் - 01
5. நூலகர் - 01
6. உதவி நூலகர் - 01
7. மூத்த மாணவர் செயல்பாடு மற்றும் விளையாட்டு அலுவலர் - 01
8. மாணவர் செயல்பாடு மற்றும் விளையாட்டு அதிகாரி - 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.04.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், வயதுவரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று பார்த்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ள 'வேலை வாய்ப்புகள்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு:

விண்ணப்ப விவரம் துறைவாரியாக முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

5. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 16-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
NIT-Tiruchirappalli invites application for various posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia