கேரள மாநிலம், கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்பக் கல்வி மையத்தில் (என்ஐடி) காலியாக உள்ள 129 தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தொழில்நுட்பக் கழகம், கோழிக்கோடு
பணி : தொழில்நுட்ப அலுவலர்
மொத்த காலிப் பணியிடம் : 129
கல்வித் தகுதி :-
- ஐ.டி.ஐ., பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி அறிவியல் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- குறிப்பிட்ட பணி அனுபவம் தேவை.
வயது வரம்பு : 01.06.2019 தேதியின்படி 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 24.06.2019 முதல் 27.06.2019 வரை நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
இப்பணியிடத்தில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதை பதிவு செய்து கொண்டு, தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் அந்தந்த பணிக்கான நேர்முகத் தேர்வு தேதியில் நேரில் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் இப்பணியிடம் குறித்த முழு விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












