மத்திய அரசிற்கு உட்பட்டு ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் காலியாக உள்ள Project Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 33 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.1.75 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் - ஹைதராபாத் (NIRDPR)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 33
பணி : Project Officer
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பி.இ, பி.டெக், எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,30,000 முதல் ரூ.1,75,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://career.nirdpr.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nirdpr.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












