காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்...! அழைக்கிறது தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம்...!

மத்திய அரசின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தகுதி வாய்ந்த நபர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பலாம்.

தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) மிகவும் சீரிய முறையில் செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இதற்கு முன்பு இது தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியமாக அமைந்துள்ளது. 1989-ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், கல்வியறிவை எளிமையா\ந வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தை ஏற்படுத்தியது.

காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்...!

என்ஐஓஎஸ் கல்வி நிறுவனமானது ஒரு தேசிய அளவிலான கல்வி வாரியம் போன்று அமைந்துள்ளது. இது கிராமப்புறப் பகுதிகளில் கல்வி அறிவை அதிகரிக்கும் வகையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) & இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை (CISCE) போன்று உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வுகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு தொழிற்கல்வி படிப்புகளையும் மாணவர்களுக்கு வழங்குகிறது.

இன்றைய காலக்கட்டத்தில் உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளியாக இது செயல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் காரணமாக இது உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப் பள்ளி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

2004-2009 ஆண்டுகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைத் தேர்வுகளுக்கு சுமார் 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3,50,000 மாணவர் சேர்க்கையை என்ஐஓஎஸ் நடத்தி வருகிறது.

என்ஐஓஎஸ் பாடத்திட்டமானது, காமன்வெல்த் கல்வி (COS) மற்றும் யுனெஸ்கோ அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது ஐக்கிய அரபு அமீரகம்(யுஏஇ), ஓமன், குவைத், நேபாளம், கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் வசிக்கும் இந்திய நாட்டவர்களுக்காக அந்தந்த நாடுகளில் கல்வி மையங்களையும் திறந்து வைத்துள்ளது.

இத்தகைய பெருமை வாய்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூலிங் நிறுவனத்தில் தற்போது குரூப் 'ஏ' பிரிவில் உதவி இயக்குனர் 2, துணை இயக்குனர் 2, அகாடமிக் ஆபீஸர் 4, குரூப் 'பி' பிரிவில் செக்ஷன் ஆபிசர் 2, இ.டி.பி., சூப்பர்வைசர் 21, குரூப் 'சி' பிரிவில் அசிஸ்டென்ட் 4, ஜூனியர் அசிஸ்டென்ட் 10, எம்.டி.எஸ்., 11, ஸ்டெனோ 3 உட்பட மொத்தம் 62 இடங்கள் உள்ளன.

இந்தப் பல்வேறு பணியிடங்களுக்கு கல்வி தகுதியானது பிரிவு வாரியாக மாறுபட்டு உள்ளது. nios.ac.in என்ற இணையதளம் மூலம் இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
21.12.2023-ம் தேதியின் அடிப்படையில் பெரும்பாலான பதவிகளுக்கு 27, 37 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகையும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறையானது எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு அடிப்படையில் இருக்கும். இந்த 2 தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்தப் பணியிடங்களுக்கு நவம்பர் 30 முதல் ஆன்லைனின் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பக்கட்டணம் பதவி வாரியாக மாறுபட்டு அமைந்துள்ளது.

இந்தப் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் வரும் டிசம்பர் 21-ம் தேதியாகும். (21.12.2023).

கூடுதல் விவரங்களுக்கு nios.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொண்டு பெற முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Institute of Open Schooling (NIOS) has sought Online Applications from Experienced Officers and Competent Candidates for various Posts. Interested persons can apply for the posts.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+