நீலகிரி மாவட்ட கூட்டுறவு நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இப்பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கொரோனா ஊரடங்கின் காரணமாக தற்போது கடைசி நாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு வரும் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்
நிர்வாகம் : நீலகிரி கூட்டுறவு வங்கி
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 32
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதன்படி, 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எஸ்.சி, எஸ்டி பிரிவினர், சீர்மரபினர் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.
ஊதியம் : ரூ.10,050 முதல் ரூ.54,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும். விருப்பமும் உள்ளவர்கள் http://www.nlgdrb.in என்னும் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31-05-2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nlgdrb.in அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












