மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள நூலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலகத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : நூலக உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : Bachelor Of Library and Information Science, M.L.I.S (Master of Library Information Science) அல்லது ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.cmsnift.com/pages/app_gpc/ap_reg.aspx என்ற இணையதளம் மூலம் 04.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் - ரூ.500
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி), பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cmsnift.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.