தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில் பணி வாய்ப்பு!

Posted By: Kani

செகந்திராபாத்தில் இயங்கி வரும் தேசிய அறிவுசார் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் 09-04-2018 ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகின்றன.

பதவிகாலியிடம் தகுதி வயது வரம்பு
சிறப்புக் கல்வி ஆசிரியர் (நிலை-6 ) (ஓ.பி.சி) 1சிறப்புக் கல்வியியல் டிப்ளமோ/ பி.எட். (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.35 வயதுக்குள்
ஹோம் விசிட்டர்/ டீச்சர் (நிலை-6) (எஸ்.சி) 1ஏதேனும் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சோசியல் வொர்க்கில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.30 வயதுக்குள்
ஜூனியர் ஸ்பெஷல் எஜுகேஷன் டீச்சர் (நிலை -5) 1சிறப்புக் கல்வியில் பட்டப்படிப்பு/ டிப்ளமோவுடன் மனநிலை சரியற்ற குழந்தைகளுடன் இரண்டாண்டுகள் பணியாற்றிய அனுபவம் (அல்லது) பி.எட். - சிறப்புக் கல்வி (அல்லது) பி.ஆர்.எஸ். (எம்.ஆர்) - சிறப்புக் கல்வி தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்.30 வயதுக்குள்
சுருக்கெழுத்தாளர் (நிலை-4) 1 எஸ்.எஸ்.எல்.சி முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங் நிமிடத்துக்கு 40 வார்த்தைகளும், ஆங்கில சுருக்கெழுத்து நிமிடத்துக்கு 100 வார்த்தைகளும் அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும்.18 -28 வயதுக்குள்

விண்ணப்பிக்கும் முறை: இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:
Director,
NIEPID,
Manovikasnagar,
Secunderabad - 500009.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் கிழே உள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 09-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

English summary
NIEPID is Hiring for Teaching and Non Teaching Staff Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia