மத்திய அரசிற்கு உட்பட்டு தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் காலியாக உள்ள தட்டச்சர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. செகந்தராபாத்தில் உள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம்
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடம் : செகந்தராபாத்
மொத்த காலிப் பணியிடங்கள் : 08
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
- LDC/ தட்டச்சர் - 01
- உதவிப் பேராசிரியர் - 02
- முதல்வர் - 01
- Workshop Supervisors-cum-store Keeper - 01
வயது வரம்பு : 15.11.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் மேற்கண்ட தொடர்புடையப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கிகளில் டிடி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : http://www.niepid.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Director, NIEPID, Manovikasnagar, Secunderabad 500 009.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.niepid.nic.in/emp 022019/dn_msec_dvg.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 15.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












