10-ம் வகுப்பு படித்தவர்கள் சித்தா பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வாகலாம். தேசிய நல்வாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள சித்தா பல்நோக்கு உதவியாளர் பணியிடங்களில் இதன்மூலம் இணைய முடியும். இங்கு மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் வரும் 05.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு nhm.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
தேசிய நல்வாழுவு குழுமம் என்பது தேசிய சுகாதார இயக்கம் என்றம் அழைக்கப்படுகிறது. இந்த இயக்கத்தின் கீழ் உள்ள தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) என்பது, குறைந்த சேவை அளிக்கப்படும் கிராமப்புறங்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாகும்.

கடந்த 2005-ல் அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கப்பட்ட தேசிய ஊரக சுகாதார இயக்கம் , பலவீனமான பொது சுகாதாரக் குறிகாட்டிகளைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்ட 18 மாநிலங்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பணியை ஆரம்பத்தில் மேற்கொண்டது. மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2013-ல் தேசிய ஊரக சுகாதார இயக்கத்துடன் (NRHM) ஒரு விரிவான தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) துணைப் பணியாக தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தை (NUHM) தொடங்க ஒப்புதல் அளித்தது.
இந்த இயக்கமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல், தாய் பிறந்த குழந்தை, குழந்தை மற்றும் இளம்பருவ ஆரோக்கியம், தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்கள் ஆகியவை கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
எல்லோருக்கும் மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்க வகை செய்தலும், எல்லோரும் தரமான மருத்துவ சேவைகளைப் பெறவும் வழிசெய்தல், மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடையில் கூட்டாண்மையை நிறுவுதல், ஆரம்ப சுகாதார நலத் திட்டங்கள், அதற்கான கட்டமைப்புகளின் நிர்வாகத்தில் பஞ்சாயத்து அமைப்புகள், சமுதாயத்தினரும் ஈடுபடும் வகையிலான தளத்தை அமைத்துத் தருதல், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அமைத்துத் தருதல், உள்ளூர் அளவில் முன்முயற்சிகளைச் செயல்படுத்த மாநிலங்களுக்கும், மக்களுக்கும் எளிதான வகையிலான செயல்முறையை நிறுவுதல், சுகாதார நலன் மேம்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை இணைந்த கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை இந்த இயக்கத்தின் முக்கிய பணிகளாகும்.தரமான சுகாதார சேவைகளை இந்த இயக்கம் நகர்ப்புறங்களிலும்,கிராமப்புறங்களிலும் வழங்கி வருகிறது.
இந்த தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் இந்தப் பணியிடங்கள் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ளன.
கல்வி தகுதியாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பள்ளிக் கல்வி வாரியத்தில் இருந்து 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
உதவியாளர் பணியிடங்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு ரூ.300/- ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து நேரில் தரவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் டிசம்பர் 5-ம் தேதிக்குள் (05.12.2023) வந்து சேரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு nhm.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












