தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிஜிஎம் பணியிடம் தயார்...!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) தற்போது முதன்மை பொது மேலாளர்(Chief General Manager ) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் டெபுட்டேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடத்துக்கு உடனடியாக விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாக உள்ளது.
இது 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை நாடு முழுவதும் பராமரித்து வருகிறது.
1988-ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டம், 1988 மூலம் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. பிப்ரவரி, 1995-ல் இந்த ஆணையம் தன்னாட்சிநிலை அந்தஸ்தை பெற்றது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சிஜிஎம் பணியிடம் தயார்...!!!

இந்த நிறுவனம் 2000-ம் ஆண்டில் ஏராளமான பொருட்செலவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி பெயர்பெற்றது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் இது அருமையான முறையில் பணியாற்றி வருகிறது.

இந்த ஆணையம் முழு நேரத் தலைவர் மற்றும் ஐந்து முழு நேர உறுப்பினர்களுக்கு மிகாமல் மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள். பகுதி நேர உறுப்பினர்கள் செயலாளர் (RT&H), செயலாளர் (செலவு), செயலாளர் (திட்டம்) மற்றும் DG (RD) & SS ஆவர்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்( NHAI) அதன் தலைமையகத்தில் தொழில்நுட்ப, நிதி, நிர்வாக மற்றும் விஜிலென்ஸ் பிரிவுகளைக் கொண்டுள்ளது. திட்ட இயக்குனர் தலைமையில் திட்ட செயலாக்க அலகுகள் (PIUs) பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கணக்கு அதிகாரிகள் ஆதரவுடன் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை மேற்பார்வையிட பல்வேறு தளங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் செயல்முறையை மிகவும் திறமையானதாக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஃபாஸ்டேக் (FASTag) என்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபாஸ்டேக் (FASTag) 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மின்னணு கட்டண வசூல் அமைப்பு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் பணமில்லா கட்டணங்களைச் செயல்படுத்துகிறது.

வாகனத்தின் கண்ணாடியில் ஒரு சிறிய, முன்பணம் செலுத்திய குறிச்சொல்லைப் பொருத்தி, பயனரின் வங்கிக் கணக்கு அல்லது பணப்பையுடன் இணைப்பதன் மூலம், வாகனம் சுங்கச்சாவடியை அணுகும் போது, அதற்கான கட்டணத் தொகை தானாகவே பயனரின் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இது கோடிக்கணக்கான பயணிகளுக்கு சாலைப் பயணத்தை மிகவும் வசதியாகவும் திறமையாகவும் ஆக்கியுள்ளது.

இந்த பெருமைமிகு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்தான் தற்போது முதன்மைப் பொது மேலாளர்
(Chief General Manager) பணியிடம் காலியாக உள்ளது. வரும் ஜனவரி 8-ம் தேதிக்குள் (08.01.2024) இந்தப் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

Chief General Manager பணிக்கு என தற்போது ஒரே ஒரு பணியிடம் மட்டுமே தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) நிறுவனத்தில் காலியாக உள்ளது.

இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணமுடியும். Chief General Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது NHAI நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும். இந்த NHAI நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் டெபுடேஷன் (Deputation) முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (08.01.2024) https://nhai.gov.in/#/vacancies/current என்ற இணைப்பில் இப்பணிக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Nationals Highway Authority of India (NHAI) is recruiting candidates for the post of Chief General Manager. Interested candidate can apply Online by visiting the official website of NHAI along with relevant documents and submit it before the deadline.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+