இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) காலியாக உள்ள விசாரணை அதிகாரி (Inquiry Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பித் தரலாம். கூடுதல் விவரங்களுக்கு https://nhai.gov.in/#/vacancies/current என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் என்பது இந்திய தேசிய நெடுஞ்சாலைகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னாட்சியுடைய ஓர் இந்திய அரசு நிறுவனமாக உள்ளது.
இது 70,548 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலை வலையமைப்பை நாடு முழுவதும் பராமரித்து வருகிறது.
1988-ஆம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சட்டம், 1988 மூலம் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. பிப்ரவரி, 1995-ல் இந்த ஆணையம் தன்னாட்சிநிலை அந்தஸ்தை பெற்றது.
இந்த நிறுவனம் 2000-ம் ஆண்டில் ஏராளமான பொருட்செலவில் தங்க நாற்கரச் சாலைத் திட்டம், கிழக்கு-மேற்கு மற்றும் தெற்கு- வடக்கு பெருந்தடவழிகளின் பகுதி மற்றும் முக்கிய துறைமுகங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி பெயர்பெற்றது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கீழ் இது அருமையான முறையில் பணியாற்றி வருகிறது.

இந்த ஆணையம் முழுநேரத் தலைவர் மற்றும் 5 முழு நேர உறுப்பினர்களுக்கு மிகாமல் மற்றும் 4 பகுதி நேர உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். பகுதி நேர உறுப்பினர்கள் செயலாளர் (RT&H), செயலாளர் (செலவு), செயலாளர் (திட்டம்) மற்றும் DG (RD) & SS ஆவர்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்( NHAI) அதன் தலைமையகத்தில் தொழில்நுட்ப, நிதி, நிர்வாக மற்றும் விஜிலென்ஸ் பிரிவுகளைக் கொண்டுள்ளது. திட்ட இயக்குனர் தலைமையில் திட்ட செயலாக்க அலகுகள் (PIUs) பல்வேறு தொழில்நுட்ப மற்றும் கணக்கு அதிகாரிகள் ஆதரவுடன் திட்டங்களை சரியான நேரத்தில் முடிப்பதை மேற்பார்வையிட பல்வேறு தளங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் செயல்முறையை மிகவும் திறமையானதாக்க, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஃபாஸ்டேக் (FASTag) என்ற புரட்சிகரமான தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபாஸ்டேக் (FASTag) 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் அது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த மின்னணு கட்டண வசூல் அமைப்பு ரேடியோ அதிர்வெண் அடையாள (RFID) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் பணமில்லா கட்டணங்களைச் செயல்படுத்துகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்தான் (NHAI) தற்போது காலியாக உள்ள விசாரணை அதிகாரி (Inquiry Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரி (Inquiry Officer) பணியிடங்களுக்கான கல்வித் தகுதி:
விசாரணை அதிகாரி (Inquiry Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் இணைச் செயலர் (Joint Secretary) பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
விசாரணை அதிகாரி (Inquiry Officer) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
விசாரணை அதிகாரி (Inquiry Officer) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காண முடியும்.
சம்பள விவரம்ம்:
இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவர்.
தேர்வு செய்யும் விதம்:
இந்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய (NHAI) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://nhai.gov.in/#/vacancies/current என்ற இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். வரும் ஜனவரி 22-ம் தேதிக்குள் (22.01.2024) விண்ணப்பங்கரளை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு https://nhai.gov.in/#/vacancies/current என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












