மத்திய அரசின் தேசிய உரத் தொழிற்சாலையில் காலியாக உள்ள தீ மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.40 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.இ, பி.டெடக் போன்ற பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : தேசிய உரத்தொழிற்சாலை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தீ மற்றும் பாதுகாப்பு அதிகாரி
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி : B. Tech./ B.E.). in Fire Engg. / Safety & Fire பேபான்ற சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.nationalfertilizers.com என்ற இணையதளம் மூலம் 21-01-2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21-01-2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.700
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nationalfertilizers.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












